Jan 22, 2011

குழந்தைகளுக்கான பாட்டி வைத்தியம்

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வரும் சிறு நோய்களுக்கு மனத்திடமுடன் இருந்து மருந்து கொடுத்து அவ்வப்போது நீக்கிக்கொள்ளும் அறிவும், ஆற்றலும் நம் முன்னோர்களுக்கு குடும்ப பழக்கத்திலே எற்பட்டிருந்தன. இப்பொழுது அதை அறவே மறந்து விட்டோம். அதனால் உரமிழ்ந்து, உள்ளமுடைந்து கவலையுற்று வருந்தி வைத்தியசாலைகளை நாடிச் செல்கின்றோம்.

இந்த நாளில் குழந்தையைப் பெற்ற தாய்க்குப் பேணி வளர்க்கத் தெரிவதில்லை என்பதைக் கோபமில்லாமலே ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். குழந்தைக்கு வருகிற வியாதிகளுக்கெல்லாம் காரணம் தாய்மார்களின் அஜாக்கிரதைத்தான்.

குழந்தைக்கு வயிற்று வலி, வாயுவினால் ஏற்படும் உப்புசம், சூட்டினால் இருமல் முதலிய சிறு நோய்களுக்கு கூட தாயார் பெரிதும் அஞ்சிச் செய்வதறியாது திகைக்கிறாள். மருத்துவரிடம் ஓடுகிறாள். அதனால் பொருள் செலவும், காலக் கழிவும் ஆகின்றன. இவ்வகைத் துன்பங்கள் எல்லாம் நேராது குழந்தைகளை காப்பாற்ற வேண்டி இந்த பக்கத்தை புதிதாக ஏற்படுத்தியுள்ளோம்.

http://www.grannytherapy.com/en/category/grannys-child-therapy/

குழந்தைகளுக்கு வரும் எந்த நோயையும், மிக எளிய முறையிலே தக்க மருந்து கொடுத்து நீக்கிக் கொள்ள இந்த இணையம் பயன்படும்.

இந்த பக்கத்தில் குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை முறையை விவரித்து உள்ளோம். ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்ட அநேக குழந்தைகளை இந்த பக்கத்தில் உள்ள மருந்துகளால் குணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பக்கத்தில் கூறப்பெற்றுள்ள மருந்துகள் அனைத்தும் தென்னிந்திய குடும்பங்களிலே கையாண்டு நூற்றுக்கு நூறு வெற்றிப்பெற்ற அனுபவ உண்மைகளாகும். இதில் கூறப்பட்டுள்ள முறைகளை கையாளுவதிலே அதிக முயற்சி தேவை இல்லை. பொருட் செலவு குறைவு. உட்கொண்டால் என்ன ஆகுமோ என்று பயப்படும் படியாக எந்த நச்சுப்பொருட்களும் இல்லை. ஆகவே இதனைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.


Share